என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் காயம்"
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பிற்பகல் பயங்கரமான சப்தத்துடன் குண்டு வெடித்தது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Pulwamaschool #PulwamaschoolExplosion
திருப்பதி:
திருப்பதி புறநகர் மண்டலம் செர்லோப்பள்ளியில் ஜில்லா பரிஷத் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க மாணவர்கள் பலர் வந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியர்கள் வரவில்லை, அவர்கள் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆசிரியர்கள் வர காலதாமதம் ஆனதால் முன்கூட்டியே வந்த மாணவர்கள் சிலர் அறிவியல் ஆய்வகத்தில் ஓடி பிடித்து விளையாடினர். அப்போது மாணவர்களில் 5 பேர் ஆசிட் பாட்டில்கள் மீது விழுந்ததால், வெடித்துச் சிதறியது. 5 மாணவர்களின் இடுப்புக்குக் கீழே ஆசிட் தெறித்து, உடல் வெந்தது. எரிச்சலை தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.
மாணவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட சக மாணவர்களும், அங்கிருந்த ஒருசில ஆசிரியர்களும் ஓடி வந்து, நடந்த சம்பவத்தைக் கேட்டு விசாரித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட பெற்றோரும் பள்ளிக்கு பதறியபடி வந்து, நடந்த விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.
அங்கு வந்த புதிபட்லா மண்டல பரிஷத் உறுப்பினர் சுதாயாதவ் தன்னுடைய காரில் பாதிக்கப்பட்ட 5 மாணவர்களை ஏற்றிச்சென்று திருப்பதியில் உள்ள ருயா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு, மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #studentsinjured
ராசிபுரம்- சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் ராசி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் இருந்து மாணவ - மாணவிகளை அழைத்து வருவதற்காக வேன் வசதி உள்ளது.
இன்று காலை சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றி வருவதற்காக வேன் சென்றது. அந்த வேனை பெரியசாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் கிளீனராக சதீஷ்குமார் (28) என்பவர் இருந்தார்.
இந்த வேன் இன்று காலை 34 பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளக் கணவாய் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.
உடனே வேனில் இருந்த மாணவ - மாணவிகள் கதறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனில் இருந்த மாணவ - மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் கிளீனர் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மகரிஷி, ஹேமரஞ்சினி, ஹர்சினி ஆகிய 3 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இவர்களை மீட்டு ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். #tamilnews
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் முத்து (வயது45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 7 பேரை ஏற்றிக்கொண்டு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.
அங்குள்ள கியாஸ் குடோன் அருகே வந்த போது அங்கு பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ அதிவேகமாக மோதியது. இதனால் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ டிரைவர் முத்து படுகாயமடைந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 7 மாணவ-மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டு இருந்த வாலிபர் வெங்கடேசன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ டிரைவர் முத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர், ஜூலை.9-
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், குடவாசல் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி வாகனங்கள் மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அதன்படி இன்று காலை வெள்ள மண்டபம் என்ற இடத்தில் இருந்து 30 மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது அச்சுதமங் களம் என்ற இடத்தில் உள்ள சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுபப்பாட்டை இழந்து பஸ் ஓடியது. இதில் ரோட்டோரத்தில் உள்ள ஆலங்குடி வாய்க்காலில் பஸ் இறங்கி பக்கவாட்டில் சாய்ந்தது.
இந்த விபத்தில் பள்ளி பஸ்சில் இருந்த 20 மாணவ- மாணவிகள் மற்றும் டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர்.
பள்ளி பஸ் டிரைவர் மகேந்திரன், பள்ளி மாணவ- மாணவிகள் நிஷா(7), கார்த்திகா (9), ராம்குமார் (8), வைஷ் ணவி(8), உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நன்னிலம் அரசு மருத்துவ மனையில் சிகிச் சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
மேலும் நிஷா, வைஷ்ணவி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக் காக திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த விபத்து பற்றி நன்னிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். * * * பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் பள்ளி வேன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்